என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மது விற்றவர் கைது"
வேலாயுதம்பாளையம்:
நொய்யல் அருகே புங்கோடை காளிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அய்யம்பாளையம் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக அரசு டாஸ்மாக் மதுபானங்களை விற்பனை செய்து வந்துள்ளார்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது அய்யம்பாளையம் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட சுப்பிரமணியை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் போலீஸ் டி.எஸ்.பி.ரவிச்சந்திரனின் ஆலோசனையின்படி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் மூவேந்திரன் (தெற்கு), முத்துகுமரன் (வடக்கு), திவ்யா (சேத்தூர்), குருவுத் தாய் (தளவாய்புரம்) மற்றும் போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது சட்டவிரோதமாக மது விற்ற செல்வம், மாரியப்பன், மாரிமுத்து, சந்தோஷ், முத்துவைரம் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 5 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ராஜபாளையம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்திரன் மற்றும் போலீசார் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக வீரபுத்திரன் (58) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் சேத்தூர் அருகே உள்ள சோலைசேரி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்ற போஸ் (62) என்பவரை சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் கைது செய்தார்.
ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மதுரை ரோட்டில் உள்ள மாயூர நாதசுவாமி கோவில் அருகே கஞ்சா விற்ற தெற்கு மலையடிபட்டியை சேர்ந்த அண்ணாமலை (வயது 57) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் கிராமத்தில் திருட்டு தனமாக மது விற்பனை செய்வதாக ஒரத்தநாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கூர் கிராமத்தில் ஒருவர் சட்டத்திற்கு விரோதமாக அதிக விலைக்கு மது விற்று கொண்டிருந்தது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் வடக்கூர் கிராமத்தை சேர்ந்த தமிழ்மணி என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரிடம் இருந்த 27 மது பாட்டில்கள், ரூ.2500 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பாப்பாநாடு காவல் சரகத்திற்கு உட்பட்ட கண்ணுகுடி பகுதியில் ஒருவர் திருட்டு தனமாக மது விற்றது தெரியவந்தது.
அங்கு பாப்பாநாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு முருகேசன் (44) என்பவரை கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்